ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றுப் பாலம் நடு பகுதி கான்கிரீட் தூண் வழுவிழந்து பூமியில் இறங்கியதால் மிகவும் அபாய நிலையினை அடைந்து உடனடியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
இன்று வரை பழுதான ஆற்றுப்பாலத்தை சரிசெய்யவில்லை. அந்த வழியாகத்தான் ஆன்மீக தளமான திருச்செந்தூர், மணப்பாடு, உவரி செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வாகனங்கள் தினசரி ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இதனால் மிக பெரிய போக்குவரத்து நெருக்கடியும், பழைய பாலத்தில் முறையான தடுப்பு சுவர்கள் இல்லாததால் மிக பெரிய ஆபத்துகளும், வாகன விபத்துகளும் எற்படுகிறது.
ஆகவே இதற்கு மேலும் தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் பழுதாகி காட்சிப்பொருளாக நிற்க்கும் ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கும் சீரான போக்குவரத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாபெரும் மரம் நடும் விழா - உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி லேபர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மற்றும் மாவட்டத்தில் போதை பொருட்களை கட்டுப்படித்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மனு!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026