பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில்,
சாதி, மதங்கள் கடந்த ஒப்பற்ற தலைவர் தளபதியார் அவர்கள் வழியில், மதங்களை கடந்த மக்கள் சேவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்,
புனித வெள்ளி அன்று சாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு தமிழகத்தை ஆளும் அரசியல் மற்றும் எதிர்கட்சிகள் கூட செய்ய முன்வராத போது பனிமய மாதா கோயில் ஆலயத்தில் பக்த்தர்களுக்கு நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் தூத்துக்குடி தவெக சார்பில் வழங்கப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாது மதங்களை கடந்து மக்கள் பணியில்,
ரமலான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இஸ்லாமிய சகோதர சகோதரிகள் உடன் நோன்பு கஞ்சி பருகி, பின்னர் இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி,

சிவன் கோவில் சித்திரை தேரோட்ட பவனி விழாவில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு உணவு அளித்து, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில், இனம் என பிரிந்தது போதும், மதம் என பிரிந்தது போதும், மனிதம் ஒன்றே தீர்வாகும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மதங்களை கடந்து மக்கள் சேவையில் தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் செயல்பட்டு கொண்டு வருகிறார்.
மொத்தத்தில் மதங்களை கடந்து மக்கள் சேவையில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் செயல் பாராட்டுக்குரியது.
