தூத்துக்குடி மாநகராட்சி அரசு மருத்துவமனையில் ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் உள்புற நோயாளிகளை உடனிருந்து பராமரிப்பாளர்களுக்கான தங்குமிடம் திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பராமரிப்பாளர்களுக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, உறைவிட மருத்துவர் சைலேஷ், குழந்தை நல தலைமை மருத்துவர் பத்மநாபன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி, திமுக மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர் அருண்குமார் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாநகராட்சி பொறியாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, கீதா முருகேசன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் திமுக செயல்வீரர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
