ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளில் நமது போர் முழக்கம் இடியென ஒலிக்கும் விதமாக மே 20ம் தேதி நாடுமுழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்த இருந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரின் காரணமாக நாடு தழுவிய வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வேலைநிறுத்தம் அறிவித்த இதே நாளில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு மோடி அரசின் தொழிலாளர் விவசாயி விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் இன்று மாலை விவிடி சிக்னல் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில செயலாளர் ரசல் விளக்க உரை நிகழ்த்தினார்.
சிஐடியு உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பொன்ராஜ், ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் பாலசிங்கம், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தனலட்சுமி, எச்எம்எஸ் ராஜ்குமார், எச்எம்எஸ் ராஜலட்சுமி ராஜ்குமார், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் ராஜ், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், எல்பிஎஃப் தொழிற்சங்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் முருகன், எல்பி எஃப் மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் சிவராமன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் சகாயம், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1. தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடு!
2. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 26,000 அறிவித்திடு!
3. காண்ட்ராக்ட் ,கேசுவல், தினக்கூலி, திட்ட பணியாளர் அனைவரையும் நிரந்தரமாக்கு!
4. முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்கு!
5. வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்கு, அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பு! அங்கன்வாடி ஊழியருக்கு காலமுறை ஊதியம் - ஓய்வூதியம் வழங்கு!
6. புதிய பென்ஷன், ஒருங்கிணைந்த பென்ஷனை ஒழித்துக் கட்டு பழைய பென்ஷனை மீண்டும் கொண்டு வா
7. உணவு, மருந்து, விவசாய விளைபொருளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கு! பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைத்திடு!
8. பொதுத்துறைகளை தனியார் மையமாக்கும் சீர் குலைவை நிறுத்து! கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தராமல் உள்ளூர் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்து!
9. விவசாய விலைப் பொருளுக்கு செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்!
10. மின்துறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மின்சார சட்டம் 2022ஐ கைவிடு!
11. ஏழைகள் மீது வரிகளை ஏற்றுவதை கைவிடு! பணக்காரர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதித்திடு!
12. கிராமப்புற வேலை திட்ட நாட்களை 200 நாளாகி தினச்சம்பளம் ரூபாய் 600 என உயர்த்திடு!
13. அரசியலமைப்பு சட்டம் உறுதி அளித்துள்ள பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, சமமாக நடத்தப்படும் உரிமை, மீதான தாக்குதல்களை நிறுத்து!
14. குடிமக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், குடியிருக்க வீடு கிடைப்பதை உறுதிப்படுத்து!
15. கட்டுமானம் உள்ளிட்ட முறை சாரா வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்த்திடு!
16. கட்டுமானம் முறை சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பிற்கு ஜிடிபி யில் ஒரு சதவீதம் நிதி ஒதுக்கு!
போன்ற பதினாறு அம்ச வேலை நிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கோவில்பட்டி திருச்செந்தூர் மையங்களில் தொழிலாளர் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
