தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் வைகாசி மாதம் 6ம் (20.05.2025) தேதியான இன்று மதியம் 12.30 மணியளவில் தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி காலபைரவருக்கு மகா யாகம், அபிசேகம், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் ஸ்ரீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

காலபைரவர் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அன்னதானத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி மற்றும் காலபைரவர் அருள் பெற்று சென்றனர்.

மாதம்தோறும் ஸ்ரீ சித்தர் பீடத்தில் சிறப்பு யாக பூஜை தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீ சித்தர் நகரில் பிரம்மாண்டமாக 11 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி, மஹா காலபைரவரை பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அம்மாவாசை நாட்களில் வணங்கினால் திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும், மன நிம்மதி பெறும், செல்வ வளம் பெருகும், தீராத நோய்கள் தீரும், கடன் தொல்லைகள் தீரும், அரசியலில் மேன்மை கிட்டும், முன்னோர்களின் சாபம் நீங்கும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்., முன்ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தம் பொங்கிடும்.


ஸ்ரீ வாராஹி அம்மனை பக்தர்கள் வழிபட ஏதுவாக ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி, தினத்தில் மதியம் 12:30 மணியளவில் அபிஷேகம், யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.


ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்கினால் கடன் தொல்லைகள் தீரும், சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும், எதிரி தொந்தரவுகள் நீங்கும், தொழில் வளம் பெருகும், இல்லத்தில் சகல செல்வங்களும் பெருகும்.