முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை, திறம்பட செயலாற்றி வருகிறார் மேயர் ஜெகன்பெரியசாமி.

அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையன்ட் நகர் 13 வது தெரு மேற்கு தொடர்ச்சி பாரதி நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய், சாலை மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய பணிகளை முடித்துக் கொடுத்ததற்காக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து தங்களது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 



இதில், திமுக வட்ட  செயலாளர்கள் சுரேஷ், சரவணன், வட்ட துணை செயலாளர்கள் பக்கிரிசாமி, கணேசன் மற்றும் சேவியர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.