பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு குற்றவாளிகளுக்கு வழங்கி தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களின் காயங்களுக்கு மருந்திடக்கூடிய ஒன்றாக உள்ளது. என்று எம்.பி. கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது


கடந்த ஆட்சியில் நடந்த வன்முறைகள், பாலியல் கொடுமைகள், அத்தனையும் நம் மனதிலே காயங்களாக இத்தனை ஆண்டுகளாக இருந்தது. இன்று வழங்கப்பட்டிருக்கக் கூடிய தீர்ப்பு என்பது அந்தக் காயத்துக்கு மருந்திடக் கூடிய ஒன்றாக அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒன்றாக குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகளை வழங்கக்கூடிய ஒன்றாக இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக விசாரணையின் போது பெண்களுடைய விவரங்கள் மற்றும் பெண்களின் பெயர்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையையும் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு நியாயம் கிடைத்திருக்கிறது. இது பாதிக்கப்படக்கூடிய அத்தனை பெண்களுக்கும் ஒரு நம்பிக்கை தரக்கூடிய நாங்கள் (பெண்கள்) பாதிக்கப்பட்டால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் ஒன்றாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக பொள்ளாச்சி சம்பவம் குறித்து உறுதியாக வாக்குறுதியை அளித்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் தற்போதைய அதிமுக ஆட்சி குற்றவாளிகளை பாதுகாத்துக் கொண்டு வருகிறது. குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்வதற்கு மறுத்துவந்தார்கள். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் பதவிகளில் வகிக்க கூடியவர்களின் நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.
நம்முடைய முதல்வர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார்கள். முதல்வர் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை இன்று நிறைவேற்றித் தந்ததாக நான் இந்த நாளை பார்க்கிறேன்.

அப்போது அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியதாக எடப்பாடி. பழனிச்சாமி கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எம்.பி. கனிமொழி கருணாநிதி அதிமுக தன்னுடைய ஆட்சியில் நடந்த குற்றத்தை நாங்கள் விசாரிக்க முடியாது. யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை குற்றவாளிகளை பாதுகாப்பதே அவர்களின் நடவடிக்கையாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் எதிர்கட்சிகள் மற்றும் ஊடகம் இணைந்து போராடியதால் தான் அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்தார்கள். இருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை இல்லை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தான் கோரிக்கை வைத்தது.

அவர்களாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யவில்லை மக்களுக்கு அதிமுக ஆட்சியில் நம்பிக்கை இல்லாத பட்சத்தில் நம்முடைய முதல்வர் அவர்கள் எதிர்கட்சியாக இருந்தபோது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். திராவிட முன்னேற்ற கழகம் மகளிர் அணி சார்பில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் போராட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு கூட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. போராட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு கூட தர்ணாவில் ஈடுபட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தி தான் அந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை அமைந்தது.

அந்த அளவிற்கு குற்றவாளிகள் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டார்கள். அதனாலதான் இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத பட்சத்தில் தான் சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது. தற்போது பொதுமக்கள் திராவிட கழகத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஒரு குற்றம் நடைபெறும் போது யாராக இருந்தாலும் அவர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தார். நம்முடைய முதல்வர் சென்னை அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை சரியாக நடைபெறும் போது அதை வேறு எங்கும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அதிமுக இன்று வைத்திருக்கக்கூடிய பிஜேபி அரசாங்கம் தான் தரவுகளில் அடிப்படையில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று ஆய்வுகளின் அடிப்படையில் தரவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு இன்று பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான மாநிலமாக தான் இருக்கிறது. குற்றங்கள் குறைவாக இருக்க கூடிய மாநிலமாக இருக்கிறது. அதற்காக குற்றங்களே நடைபெறவில்லை என்று நான் கூறவில்லை நடைபெறக்கூடாது ஆனால் அப்படி நடைபெறும் போது பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நம்ம முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

அதிமுக ஆட்சியின் போது பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட யாரையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இன்று அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. அதனால் அதிமுக தான் தலை குனிந்து நிற்க வேண்டுமே தவிர திமுக தலைகுனிந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை, கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை இது சம்பந்தமான செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தக்கூடிய போராட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு தான் வருகிறது. கடந்த ஆட்சியில் இருக்கும் சூழ்நிலைகள் அவர்களுக்கு நன்றாக தெரியும். தற்போது இருக்கும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு நன்றாக தெரியும். நியாயமான போராட்டங்களுக்கு அனுமதித்து அளிக்கப்பட்டு தான் வருகிறது. என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.