தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பணிபுரியும் மகளிர்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதியுடன் தொடங்கப்பட்டுள்ள "தோழி" பணிபுரியும் மகளிர் விடுதி ஆசிரியர் காலனி இரண்டாவது தெரு கிழக்கு தெருவில் இன்று காலை திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா வரவேற்புரை ஆற்றினார்.

திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பணிபுரியும் மகளிர்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய "தோழி" பணிபுரியும் மகளிர் விடுதியினை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி விடுதியினை பார்வையிட்டார். பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழா மேடையில் விலையில்லா தையல் இயந்திரங்களை எம்.பி. கனிமொழி கருணாநிதி 98 பயனாளிகளுக்கு வழங்கினார். சமூக நலத்துறை சார்பில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மண்டல தலைவர் அன்னலெட்சுமி, அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், 34 வது வட்ட செயலாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் கனகராஜ், இசக்கி ராஜா, கந்தசாமி, பொன்னப்பன், சந்திர போஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், திமுக மகளிரணி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
