தூத்துக்குடி பீச் ரோட்டில் கடல் பகுதியில், தனியார் பங்களிப்புடன் மிதக்கும் ஹோட்டல் அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி பீச் ரோடு health zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் முதல் பெல் ஓட்டல் வரை சாலையின் இருபுறங்களிலும் நடைபயிற்சி செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் பீச் ரோட்டில் கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
முகாமில் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலைசெல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, தனலட்சுமி, மும்தாஜ், ராமு அம்மாள், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி!!
அடுத்த
கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தோழமை கட்சிகள் கலந்து கொண்ட வஃக்பு திருத்த மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026