தூத்துக்குடி ராயல் பியர்ல்ஸ் சிட்டி அரிமா (லயன்ஸ்) சங்கத்தின் வருடாந்திர ஆளுநர் வருகை தின விழா தூத்துக்குடி YMCA அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் ஆதி சச்சித பாரதி தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் குமரேசன், சங்கத்தின் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட சேவைப் பணிகளை அறிக்கையாக வாசித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா மாவட்ட ஆளுநர் டாக்டர் ஷாஜகான், சேவைத் திட்டங்களின் ஒரு பகுதியாக அரிசி, சேலைகள், நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை கருவி (டயாபெட்டிக் மெஷின்), கண் கண்ணாடிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான ஜியோமெட்ரி பெட்டிகள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை துணை ஆளுநர் டாக்டர் ஜான் சுப்பையா, மாவட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் சுப்பையா, டாக்டர் பிரேம்குமார், வனமூர்த்தி, நெஸ்தர், ராய்ஸ்டன், சீனிவாசன், சகாயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாக்குழுத் தலைவர் ஸ்டேன்லி வேதமாணிக்கம், பட்டயத் தலைவர் செம்புலிங்கம், சங்கர், வீரபெருமாள், டாக்டர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நலத்திட்ட உதவிகள் மூலம் பல ஏழை, எளிய மக்களுக்கு பயன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.