தமிழக துணை முதல்வர் மார்ச் 7ஆம் தேதியான இன்று தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்க உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கு ₹136 கோடி நிதி வழங்கிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி தற்போது தூத்துக்குடி நகரில் பேசுபொருளாக மாறியுள்ளது.


அந்த சுவரொட்டியில், “மார்ச் 7ஆம் தேதி தமிழக துணை முதல்வரால் தூத்துக்குடியில் திறந்து வைக்கப்படும் அரசு மருத்துவமனைக்கு ₹136 கோடி நிதி வழங்கிய பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி! நன்றி!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ்கனி, தெற்கு மண்டல் தலைவர் கே.மாதவன், மேற்கு மண்டல் தலைவர் ஜி.லிங்கசெல்வம், வடக்கு மண்டல் தலைவர் டாக்டர் கே.சுதா (M.Com., M.Phil., Ph.D.) ஆகியோர் பெயர்களும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.


தமிழக துணை முதல்வர் கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ள நிகழ்ச்சியை முன்னிட்டு பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் வெளியிட்டுள்ள இந்த சுவரொட்டி அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து, தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.