சி.எம்.என். பாய்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு மற்றும் முன்னாள் மாவட்ட கையுந்து பந்து அமரர் பி.எஸ்.டி.எஸ். டி. கையுந்து பந்து போட்டி சி.எம்.என். பார்க் சின்னமணி நகர் மில்லர் புரத்தில் நேற்று (17.05.2025) மாலை 3 மணியளவில் தொடங்கியது .போட்டியினை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட கையுந்து பந்து தலைவர் ஜான் வசீகரன் செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்று (18.05.2025) கையுந்து பந்து இறுதி போட்டிகள் நடைபெற்று மாலை நிறைவு பெற்றது. விழாவில் பி.எஸ்.டி.கே. குரூப் டி. வேல் சங்கர் தலைமை வகித்தார். 34 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திர போஸ், 33 வது வார்டு திமுக கவுன்சிலர் பொன்னப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.எம்.என். கிளப் கந்தசாமி செல்லையா வரவேற்புரை ஆற்றினார்.

கையுந்து பந்து போட்டி விழாவில் பரிசு வழங்குவதற்காக சிறப்பு அழைப்பாளராக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்க பணம் வழங்கி வெற்றி பெற்ற அணி வீரர்களை வாழ்த்தினார்.

போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, ஸ்பிக் நர்சிங் குரோத், பி.எஸ்.டி.கே. ஷிப்பிங் சர்வீஸ், ஆகியோர் செய்திருந்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பண்டார விளை தொழிலதிபர் என்.ஆர். தினகரன், ஜே.ஏ.எஸ். டைரக்டர்ஸ் பிராங்களின், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சி.எம்.என். பாய்ஸ் கையுந்து பந்து கிளப் தலைவர் ராஜா, செயலாளர் சச்சின் பெல் , பொருளாளர் அருண்குமார், துணை தலைவர்கள் மணிகண்டன், அஸ்வின் குமார், துணை செயலாளர்கள் வெங்கடேஷ், மோகன் குமார், கௌரவ ஆலோசகர்கள் ரமேஷ் கார்த்திகேயன், ரமேஷ், காளிராஜன், தனபால், முருகேசன், புஷ்பராஜ், மற்றும் கிளப் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
