எஸ்.இ.டி.சி. தூத்துக்குடி கிளை நிர்வாகம் மருத்துவ விடுப்பை தலைமையகம் அனுப்பாமல் தன்னிச்சையாக ஆப்சென்ட் போட்டது ஏன்? விடுப்பு கேட்கும் தொழிலாளி விடுப்பு விண்ணப்பத்தை கிழித்து மூஞ்சியில் வீச அதிகாரம் கொடுத்தது யார் தொழிலாளர்களின் அவலநிலை, மற்றும் ஒருதலை பட்சமாக செயல்படும் தூத்துக்குடி கிளை மேலாளர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து சிஐடியு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் எஸ்.இ.டி.சி தொழிலாளர்களின் அவல நிலை தூத்துக்குடி பணிமனையில் சுமார் 75 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 7 தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
பல்வேறு சூழ்நிலை காரணங்களால் விடுப்பு படிவ கடிதத்தை நேரில் வழங்கினாலோ அல்லது தபாலிலோ தூத்துக்குடி கிளை நிர்வாக முகவரிக்கு அனுப்பினாலோ ஆப்சென்ட் போடும் நிலை தான் உள்ளது. 80% பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் பிரேக் பிடிப்பதற்கு சரிவர செயல்பாடு இல்லை, அதற்கு தேவையான ஸ்லாக் அஜிஸ்டர் வாங்குவதில்லை, பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான முகப்பு விளக்கு சரிவர பராமரிக்கப் படுவதில்லை, தொழிலாளர்கள் தங்கள் சொந்த செலவில் எல்.இ.டி லைட் (பல்ப்) வாங்கும் சூழ்நிலையில் தான் கிளை நிர்வாகம் உள்ளது.
தொழிலாளர்கள் விஷேச நிகழ்ச்சிகள், உடல் நிலை காரணங்கள் மற்றும் தங்கள் சொந்த தேவைக்கு விடுப்பு கொடுத்தால் விண்ணப்ப படிவத்தை வாங்குவதில்லை, தபால் மூலம் அனுப்பினால் பெற்றுக்கொண்டு ஆப்சென்ட் போடும் அவல நிலையில் தான் தொழிலாளர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஒரு தொழிலாளர் விடுப்பு விண்ணப்பம் நேரில் கொடுத்தால் கண் எதிரேயே கிளை மேலாளர் கிழித்து போட்டு விடுகிறார். மேலும் பேருந்துகளில் பயணிகள் இல்லாமல் இரவு நேரங்களில் ஹால்ட் ஆனாலோ, பிரேக் டவுன் ஆனாலோ, வண்டி கோளாறு ஏற்பட்டாலோ, நோ பே நோ ஒர்க் என்று கூடுதல் வருகை வழங்க கிளை மேலாளர் மறுத்து வருகிறார்.
எனவே மேற்படி தொழிலாளர்களின் அவல நிலையை தமிழக அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் தொழிலாளிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா? என தொழிலாளர்கள் குமுறுகின்றனர்.
தொழிலாளர்கள் படும் அவலநிலையை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் செவி சாய்க்குமா, தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
