தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 31 வது வார்டு அண்ணா நகர் 6 வது தெரு 3 வது குறுக்குத் தெரு பகுதியில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம் இன்று மாலை நடைபெற்றது.

முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் 31 வது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் 31 வது வார்டு கவுன்சிலரும், மாநகர துணை செயலாளருமான கனகராஜ், 31 வது வார்டு திமுக வட்ட கழக செயலாளர் பாலகுருசாமி, தொமுச மத்திய சங்க பொருளாளர் முருகன், அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், உட்பட 31 வது வார்டு நிர்வாகிகள், மாநகர அணி பகுதி நிர்வாகிகள், பாக முகவர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.