தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், குருஸ்புரம் பகுதியில் எம்.எம். அப்துல்லா பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், அறிஞர் அண்ணா திருமண மண்டபம் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை, ஜார்ஜ் ரோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை, லெவிஞ்சிபுரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை, அமுதா நகர் எம்.எம். அப்துல்லா பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடை, என மொத்த ஆறு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் மற்றும் நியாயவிலை கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி இன்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு செய்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து ககொண்டனர்.