தூத்துக்குடியில் இன்று சண்முகபுரம் பகுதி சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் சிவன் கோவில் தேரடி தெருவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கி அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்பு நிகழ்த்தினார்.


சிறப்பு அழைப்பாளராக நெல்லை இ. முத்தையா சண்முகபுரம் பகுதி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனை தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், செயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாநில பேச்சாளர் இருதயராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், வட்ட கழக செயலாளர் சிங்கராஜ், சண்முகபுரம் பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் கதிரேசன், மதியழகன், சீனிவாசன், அபிராமி நாதன், முத்து ராமலிங்கம், மனோ மரியதாசன், சாமிநாதன், கருப்பசாமி, சுரேஷ் மகாராஜன், கங்கா ராஜேஷ், பொன்ராஜ், மாரிசெல்வ ஈஸ்வரன், மகேஸ்வரி, சரண்யா, பாப்பாத்தி, பொ. பேபி ஏஞ்சலின், மற்றும் சண்முகபுரம் பகுதி வட்ட கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழக மூத்த முன்னோடிகள், மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


39 வது வட்ட கழக செயலாளர் சக்திவேல் நன்றியுரை நிகழ்த்தினார்.