தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டு லயன்ஸ் டவுன் பகுதி முழுவதும் உப்பளங்களில் இருந்து வீசும் தூசி கலந்து கண்ணுக்கு தெரியாத மாசு ஏற்படுத்தக்கூடிய காற்றால் 47வது வார்டு பகுதியில் வசிக்கக்கூடிய முதியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தும்மல், இருமல், சளி தொந்தரவு, காய்ச்சல், போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், இந்த மாசு ஏற்படுத்தக்கூடிய காற்றால் லயன்ஸ் டவுன் பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



மாசு ஏற்படுத்தக்கூடிய காற்றை கட்டுபடுத்த மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவும், 47வது வார்டு பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு மாசு கலந்த காற்றினால் நோய்கள் ஏற்பட்டு அவர்கள் படும் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு கண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்களும், லயன்ஸ் டவுன் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.