கரூரில் நடைபெற்ற வெற்றிக்கழக தலைவர் விஜயின் பொதுக்கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் நடந்த அதே இரவு முதலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைகளில் சென்று காயமடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறியதோடு, உயிரிழந்தோருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள், அதிகாரிகள் தளத்தில் நின்று பணியாற்றினர்.
இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி., கரூருக்கு நேரில் சென்று உயிரிழந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியுதவிகளை வழங்கியதோடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு, மருத்துவ அதிகாரிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். சுமார் நான்கு மணி நேரம் முழு உழைப்புடனும் கடமை உணர்வுடனும் பணியாற்றிய கனிமொழி, “முதலமைச்சர் ஸ்டாலின் எண்ண ஓட்டத்தை செயலாக்கிய முன்னுதாரணம்” என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
கொரோனா கால ஊரடங்கு நேரத்திலும், வெள்ளப்பாதிப்பு காலத்திலும் மக்களுக்காக ஆபத்துகளை பொருட்படுத்தாமல் பணியாற்றிய அவரது முன்னாள் அனுபவங்களும், தற்போது கரூரில் காட்டிய அர்ப்பணிப்பும், “கட்சித் தலைவராக மட்டுமல்ல, மக்களுக்காக வாழும் உண்மையான பொது சேவகர்” என்ற மக்கள் மனப்பான்மையை வலுப்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன்பொியசாமி உள்ளிட்டோர் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். திமுகவின் வலுசேர்க்கும் விதமாக கனிமொழியின் பணிகள் சிறப்பாக அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
“கரூர் துயரத்தில் முதல்வர் ஸ்டாலின் எண்ணத்தை செயலாக்கிய கனிமொழி – கடமை உணர்வின் முன்னுதாரணம்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கரூர் பொதுக்கூட்ட பலி – ஜாலியன் வாலாபாக் படுகொலையை மீட்ட சம்பவம்; பொறுப்பாளர்களை கைது செய்யாதது ஏன்?” – லஞ்ச ஒழிப்பு பாபு கேள்வி?
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றம் – “அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும்” : மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026