தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பா குளத்தின் உபரி நீர் வடிகால் வாய்க்காலின் ஆத்தூரின் கீழ்பகுதியில், நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் சுத்திகரிப்பு மற்றும் சரிசெய்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி பாஜக ஆழ்வை கிழக்கு ஒன்றியத் தலைவர் திரு. சிவஜோதி பாண்டியன் அவர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் டிசிடபிள்யூ நிறுவனத்தினரும் இணைந்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக இந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டது.
ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் ஆகாயத்தாமரை கொடிகள் மற்றும் முற்புதல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், மழை காலங்களில் நீர் தேங்குதல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருகிலுள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு வந்தன. இதனை கருத்தில் கொண்டு, டிசிடபிள்யூ நிறுவனத்தின் உதவியுடன் தற்போது சுத்திகரிப்பு மற்றும் தடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் டிசிடபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. ஒயிட் ஃபீல்ட், பாஜக ஒன்றியத் தலைவர் திரு. சிவஜோதி பாண்டியன், சட்டமன்ற பொறுப்பாளர் திரு. ராஜ கண்ணன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு. விக்னேஷ் குமார், ஒன்றியத் தலைவர் திரு. பால்வண்ணன், ஒன்றிய பொருளாளர் திரு. சுரேஷ் பாபு, செய்தி ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் திரு. மயில்வாகனன், ஒன்றிய நிர்வாகி திரு. முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பணிநிலை முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த நடவடிக்கை மூலம் மழைநீர் வடிகால் திறம்பட செயல்படுவதுடன், ஆற்றங்கரையோர கிராமங்களில் வெள்ளப் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
கடம்பா குளத்தின் உபரி நீர் வடிகால் வாய்க்காலின் ஆத்தூரின் கீழ்பகுதி சுத்திகரிப்பு பணி தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண்கள் பாதுகாப்பு கோரியும், கோவை பாலியல் வன்முறைக்கு எதிராகவும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
வானத்தைத் தொட்ட கனவு – தூத்துக்குடி மாணவர்களை விமானப் பயணத்தில் ஏற்றிய நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ்!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026