ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் பனைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு குறித்து தென் மண்டல சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் மற்றும் பனை தொழில் ஆர்வலர்கள், பனைத் தொழிலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டமானது இன்று (26.05.2025) மாலை 4 மணியளவில் தூத்துக்குடி விவிடி ரோட்டில் அமைந்துள்ள எஸ்.டி.ஆர். ஹோட்டலில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவரும், பனை மரத் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:-
பனைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாட்டை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடந்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் முதல்வரை சந்தித்து இன்னும் தேதி வாங்கவில்லை, மாநாட்டை நடத்துவது குறித்து எங்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டுவிட்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பணைத் தொழிலாளர்களை அழைத்து மாநாட்டை நடத்த மற்றும் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.
எனக்கு பனைத் தொழிலாளர் வாரியத்தில் தலைவராக பொறுப்பு வழங்கிய பிறகு முதல் ஆண்டு 15 ஆயிரத்திற்கும் மேல் பனைத் தொழிலாளர்கள் பனைத் தொழிலாளர்கள் வாரியத்தில் புதியதாக சேர்க்கப்பட்டார்கள். இரண்டாம் ஆண்டு பணைத் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். மூன்றாம் ஆண்டு 1 கோடி பணை விதைகள் நடுகின்ற பணிகளை ஒரே நாளில் 1,20,000 மாணவர்களை வைத்து 14 கடற்கரை பகுதி மாவட்டங்களில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 1 கோடி பனை விதைகளை நட்டு உலக சாதனை படைத்திருக்கிறோம்.
தற்போது நான் பதவி ஏற்றி நான்காம் ஆண்டு மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இந்த மாநாட்டின் மூலம் பனைத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்தும் அதோடு மட்டுமல்லாது இந்த ஆண்டு பனைத் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளார்கள். ஏற்கனவே தூத்துக்குடி சுகம் ஹோட்டலில் இது பற்றி பேட்டி அளித்திருந்தேன். நிறைய இடங்களில் பனை ஏறுவதை காவல்துறை தடுத்து கொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாது வழக்கும் பதிவு செய்கிறார்கள். இதுபற்றி பனைத் தொழிலாளர்கள் என்னிடம் புகார் கொடுத்தார்கள். புகாரின் அடிப்படையில் 20 மாவட்டங்களுக்கு மேல் நானே நேரடியாக சென்று பனைத் தொழிலாளர்களிடம் அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தேன். அவர்கள் கூறுவது காலையில் இறக்குகின்ற பதனீர் மாலையில் புளித்து விட்டால் அதற்கு காவல்துறை வழக்கு போடுகிறார்கள். ஆயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த சொல்கிறார்கள். இல்லையெனில் விஷசாராய வழக்கும் போடுகிறார்கள்.
இதனால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த தொழிலானது நான்கு மாதம் தான் நடைபெறும். இந்த நான்கு மாத காலம் 40 அடி 60 அடி உள்ள பனை மரங்களில் ஏறி தான் பதனீரை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறோம். இந்த நான்கு மாதங்கள் காவல்துறை தொடர்ந்து இடையூறு செய்வதன் காரணத்தினாலே எங்களால் பணைத் தொழிலை செய்ய முடியவில்லை, என்று பல மாவட்டத்தில் உள்ள பனைத் தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டார்கள். இது சம்பந்தமாக தமிழ்நாடு முதல்வரிடம் கடிதம் கொடுத்தோம். டிஜிபி அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினோம். ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சைலேந்திரபாபு அவர்கள் டிஜிபியாக பணியாற்றிய அந்த நேரத்தில் அவர் ஒரு சுச்சரிக்கை வெளியிட்டிருந்தார்.
பனைத் தொழில் செய்கின்ற பனைத் தொழிலாளர்களை காவல்துறை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. அதோடு வழக்கும் தொடரக்கூடாது என்று ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி அந்த மூன்று ஆண்டுகள் பனைத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை, ஆனால் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்த காரணத்தினால் கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி சட்டத்தை கடுமையாக்கினார்கள். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் என பைன் போடவேண்டும். என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் விளைவாக ஏழைத் தொழிலாளர்கள் 40 அடி 60 அடி பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கி தனது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிற பனைத் தொழிலாளர்கள் மீதும் 50 ஆயிரம் ஒரு லட்சம் என்று பைன் போடுவதின் காரணத்தால் சீவப்பட்ட பனை மரங்களை விற்க வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டது.
அவர்களை சந்தித்த போது மாநாடு ஒன்றை இந்த ஆண்டு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவு பனை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். என்று நாம் தெரியப்படுத்த வேண்டும் இதன் மூலம் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும். என்று கேட்டுக் கொண்டதனாலே வருகின்ற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். சென்னை சென்றவுடன் முதல்வரை சந்தித்து தேதி கேட்க இருக்கிறோம். பின்னர் மாநாட்டை நடத்துவது குறித்து அறிவிப்பதற்காக இன்று (26.07.2025) தென் மாவட்டங்களில் கழக நிர்வாகிகள் அதேபோல இந்த மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் வாழ்கின்ற பனைத் தொழிலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம். என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
சந்திப்பின் போது சமக மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
1 கோடி பனை விதைகள் நடுகின்ற பணிகளை கடலோர மாவட்டங்களில் ஒரே நாளில் நட்டு உலக சாதனை படைத்திருக்கிறோம் - பனை மரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர். நாராயணன் தகவல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகர 48 வது வார்டு திமுக சார்பில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கலைஞரின் முரட்டு பக்தர் 8 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026