தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நகர்மன்ற தலைவரும், கலைஞரின் முரட்டு பக்தன் என்று கலைஞர் கருணாநிதி அவர்களால் புகழப்பட்ட என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று போல் பேட்டை நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது மார்பளவு சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில்,
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, அஸ்வின் துரை, வைதேகி, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், சந்தன முனிஸ்வரன், ஜோயேல், முருகப் பெருமாள் மற்றும் உமாமகேஸ்வரன், முத்துக்குமார் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டு என். பெரியசாமியின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
