தூத்துக்குடியில் 2ம் கேட்டு அருகில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்திட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமினை தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்திடும் வகையில் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் அரசு அலுவலர்கள், திமுக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பிற துறைகளின் மூலம் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் சுயதொழில் செய்வதற்கு பயிற்சியும் (ம) சுயதொழில் செய்திட நிதியுதவி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.