தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி துறை சார்பில் தூத்துக்குடி அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக் கல்லூரி) ரூபாய் 2.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை இராணி மேரி கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வக கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி கட்டிடங்களை பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்துராஜ், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் ரூபராஜா, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், உள்ளாட்சி அமைப்புகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.