மே 22 ம் தேதி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13  அப்பாவி மக்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு இறையானார்கள். 


உயிர்நீத்த தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரி எதிர்ப்புறம் உள்ள தந்தை பெரியார் பதிப்பகத்தில் இன்று மாலை ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வீரவணக்க கூட்டத்திற்கு ஸ்டெர்லைட் நிலை மீட்பு இயக்கம், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் சாமு. காந்தி தலைமை தாங்கினார். தெற்கு வீரபாண்டியபுரம் மணி பெருமாள், சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நல இயக்கம் எபினேசர், ஜே. ஜெயராமன் எம். முருகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.


தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் அ. வியனரசு, மக்கள் சிவில் உரிமை கழகம் பேராசிரியர் கி.வி. சுந்தரி மைந்தன் ஆகியோர் தலைமை உரை நிகழ்த்தினார்கள். சிறப்புரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, தந்தை பெரியார் படிப்பகம் பாதுகாவலர் காசி, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், புரட்சிகர விடுதலை முன்னணி தோழர். சுஜித், மள்ளர் பேராயம் தலைமை ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் தமிழ்மாறன், மக்கள் அதிகாரக் கழகம் மாவட்ட செயலாளர் தோழர். தாளமுத்து செல்வா, தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜூனன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.


கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்க நினைவு அஞ்சலி செய்தனர்.