ஸ்டெர்லைட் என்னும் நச்சு ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து விரட்டிட ஒட்டுமொத்த மக்களும் வெகுண்டெழுந்து நடத்திய போராட்ட பேரணியில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் மன்னுயிர் காக்க இன்னுயிர் நீத்த 13 தியாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேல் படுகாயமடைந்த அப்பாவி மக்கள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (22.05.2025) மாலை பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கத்தின் வெளியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம், அனைத்து பரத குல ஊர் நலக்கமிட்டி, பாண்டியபதி 16ம் மாமன்னர் தேர்மாறன் மீட்பு குழு சார்பில் 7 ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம், அனைத்து பரத குல ஊர்நலக்கமிட்டி, பாண்டியபதி 16ம் மாமன்னர் தேர்மாறன் மீட்புக்குழு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மண்ணைகாக்க உயிர் நீத்த தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
