அமலாக்கத்துறை சோதனை என்பது புதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜனவரி மாதம் கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து மிகப்பெரிய அறிவிப்பு இருக்கும். அமலாக்கத்துறை சோதனை என்பது புதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தை லஞ்சமாகவும் ஊழலாகவும் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. ஆயிரம் ரூபாய் திட்டம் என மூளை சலவை செய்து பெண்களின் வாக்குகளை பெற்றுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்கிறது என்றார்.
மேலும், அதிமுகவினர் குறித்து பாஜகவினர் விமர்சிக்க கூடாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "கூட்டணி என்று அமைத்த பிறகு அதற்குள் சலசலப்பு வந்து விட்டால் கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கருத்துக்கள் சொல்வதை கட்டுப்படுத்துகின்றனர்" என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி
மாதம்தோறும் 1000 ரூபாய் திட்டம் பெண்களை மூளைச்சலவை செய்து வாக்குகளை பெற்று இருக்கிறது திமுக - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகளுக்கு பாண்டியபதி பரதவர் நல சங்கம், அனைத்து பரத குல ஊர்நலக்கமிட்டி, பாண்டியபதி 16ம் மாமன்னர் தேர்மாறன் மீட்புக்குழு சார்பில் 7ம் ஆண்டு வீரவணக்கம்!!
அடுத்த
தூத்துக்குடியில் தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா - வட்டாரத் தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026