தூத்துக்குடி மாவட்டம் தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவானது இன்று (23.05.2025) பிற்பகல் ஏ.பி.சி கல்லூரி எதிரில் உள்ள பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.


பாராட்டு விழா கூட்டத்திற்கு தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இரா. சித்ராதேவி, பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணி நிறுவனர் காசி, மாநில மதிப்பியல் தலைவர் அருள்ராசு, மாநில தலைவர் நடராஜன், பொதுச் செயலாளர் ஜெய. துரை, மாநில மகளிரணி செயலாளர் சந்திரா, மாநில மகளிரணி செயலாளர் புவனேஸ்வரி, மாநில அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி, மாநில துணை தலைவர் ரவி, மாநில இணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில செய்தி தொடர்பாளர் பெருமா. மணிவண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் துரை, கொள்ளிடம் வட்டாரச் செயலாளர் சிவசங்கர், மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் ரவி, வேதாரண்யம் வட்டாரத் தலைவர் சரவணன், வேதாரண்யம் வட்டாரச் செயலாளர் சுப்பிரமணியன், வேதாரண்யம் வட்டாரப் பொருளாளர் ப. ரவி, கீழ் வேலூர் வட்டாரம் தலைமை ஆசிரியர் சீ. முரளி, ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


சாமி நத்தம் இந்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அலர் மேலு, ஓடைப்பட்டி புதூர் TNDTA நடுநிலைப் பள்ளி முத்தமிழ் செல்வி, மருதன் வாழ்வு த.சு. நாடார் நடுநிலைப் பள்ளி சரஸ்வதி, சக்கம்மாள்புரம் ஊ.ந. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா. தென்னரசு, கடம்பூர் TNDTA தலைமை ஆசிரியர் அருள் குமார், ஊ.ஒ.தொ.ப. முள்ளூர் தலைமை ஆசிரியர் டே. கிளாரன்ஸ் ஜேக்கப் ஆசிர், ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.


தலைமை ஆசிரியை சிவரஞ்சனி, ஆசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியை பாக்கியசீலி, ஆசிரியை திலகவதி, ஆகியோர் பாராட்டு பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் பழனிச்சாமி, மைக்கேல் ராஜ், தலைமை ஆசிரியர் சுதா, முருகராஜ், இரா. செல்வராஜ், மோ. ஜெஸ்வின் மேரி, தலைமை ஆசிரியர் ஜெயபழனிச் செல்வி, சின்னத்துரை, மோசஸ் தினகரன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 3 மணியளவில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.