முத்தரையர் முன்னெடுத்து போரிட்ட அனைத்துப் போரிலும் வெற்றிக் கண்டு வாகை மலரின் வரலாற்றுக்கும், வீரத்துக்கும் சொந்தக்காரருமான "மாவீரர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழா இன்று கொண்டாடப்பட்டது.


தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாநகராட்சி 8 வது வார்டுக்குட்பட்ட திரேஸ்புரம் ஸ்ரீ ஆதி முனீஸ்வரர் ஆலயம் முன்பு, ஊர்க் கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின்" திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

முன்னதாக ஸ்ரீ ஆதி முனீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து, பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.