எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 2018 ம் ஆண்டு மே 22 ம் தேதி நடைபெற்ற துயர சம்பவம் இந்த ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய மக்களை காவல்துறையை ஏவி அடக்கு முறையை கொண்டு 13 அப்பாவி மக்களை கொன்று குவித்த இந்த அதிமுக ஆட்சிக்கு தூத்துக்குடி பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டினார்கள். போராட்ட களத்தில் தன்னுயிர் நீத்த தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு நாளில் தியாகத்தை போற்றும் வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாவட்ட கழகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்க நினைவு அஞ்சலி செலுத்தினார். பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 குடும்பங்கள் மற்றும் காயமடைந்த 4 பேருக்கும் அரசு வேலை சொன்னதை செய்த திமுக அரசுக்கு தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் ஆதரவு அளிப்பார்கள். மீண்டும் திராவிட மாடலின் விடியல் ஆட்சி மலர வேண்டும் என்று இந்த வீரவணக்க நினைவு நாளில் சபதம் ஏற்போம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், மேகநாதன், நிர்மல் ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், ஜெயசீலி, தேவேந்திரன், மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வட்ட செயலாளர்கள் கருப்பசாமி, சிங்கராஜ், கங்கா ராஜேஷ், மனோ, வழக்கறிஞர் ரூபராஜா, தகவல் தொழில்நுட்ப அணி அந்தோணி கண்ணன், மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வீரவணக்கம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வீரவணக்கம்!!
அடுத்த
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகளுக்கு ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் ஏழாம் ஆண்டு வீரவணக்கம்!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026