தூத்துக்குடி புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில செயலாளர் பரணிமாரி ஆகியோரின் வழிகாட்டுதல்படி, புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவர், கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகன் மூர்த்தியார் பிறந்தநாளையொட்டி இன்று (10.05.2025) மாலை தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க ஜங்ஷன் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் தெய்வ முருகன் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் ஜரினாபானு, மாவட்ட துணை செயலாளர்கள் இந்திரன், அந்தோணிசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், மாவட்ட பொறுப்பாளர் துறை செயலாளர் மகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநில துணை செயலாளர் முருகேசன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.


ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் மாநில இளைஞரணி செயலாளர் கருப்பசாமி (எ) கரிகாலன், தாயகம் மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அகமது, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் மாநில பொதுச் செயலாளர் கமலக்கண்ணன், தமிழர் முன்னேற்றக் கழகம் கட்சி நிறுவனர் தலைவர் அர்ச்சுனன், சமூக ஆர்வலர் சே.மா. சந்தன ராஜ் பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரத்தினசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தூத்துக்குடி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் முனியசாமி, மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆட்டோ சங்க செயலாளர் ஹனிபா, மாவட்ட மூர்த்தியார் பேரவை இணை செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராமலெட்சுமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மைக்கேல்ராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஞானப்பிரகாசம் உட்பட மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இறுதியில் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட இணை செயலாளர் கணேசன் நன்றியுரை நிகழ்த்தினார்.