தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் மாவட்ட கழக திமுக செயலாளர் என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று 44 வது வட்ட கழக திமுக செயலாளர் சுப்பையா தலைமையில் போல் பேட்டை நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் 44 வது வட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி, ராஜசேகர், சுடலை குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
