தூத்துக்குடியில் இன்று திமுக முன்னாள் மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து போல் பேட்டை நினைவிடத்தில் அமைந்துள்ள என். பெரியசாமியின் மார்பளவு சிலைக்கு தூத்துக்குடி விடுதலை சிறுத்தை கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செய்தி தொடர்பாளர் ரா. செல்வக்குமார், மத்திய மாவட்ட தொண்டரணி லெ. முருகன், 58 வது வார்டு வட்ட துணை செயலாளர் மா. சந்தனகுமார், 58 வது வார்டு துணை செயலாளர் மு. மாடசாமி, மகளிரணி முருகேஸ்வரி, ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் ப. முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
