தூத்துக்குடி முகவரியாக திகழ்பவர் என். பெரியசாமி அவரது 8 ம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு " செய்தி களம் " நியூஸ் குழுமம் அவர்க்கு புகழ் அஞ்சலி செலுத்துகிறது.

என். பெரியசாமி தீவிர அரசியல்வாதி, கலைஞரின் முரட்டு பக்தன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 தேர்தல்களில், தூத்துக்குடி தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரியசாமியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் ஆகும். 14 வது வயதில் தூத்துக்குடிக்கு வந்தவர், அங்குள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றினார். கருணாநிதி மீது கொண்ட பற்றால் திமுகவில் இணைந்தார். 1976 இல் அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆற்காடு வீராசாமி, வைகோ ஆகியோருடன் பாளையங்கோட்டை சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டிருந்தார்.

அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்ட பெரியசாமி, திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் உருவானதில் இருந்து 30 ஆண்டுகளாக திமுக மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பல தொழிற்சங்கங்களின் தலைவராகவும், தி.மு.க மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார். அவர் 2016 ஆம் ஆண்டு கலைஞரின் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் கலைஞர் விருது பெற்றார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 26, 2017 அன்று பெரியசாமி காலமானார்.

தூத்துக்குடிக்கு என். பெரியசாமி ஒரு முகவரியாகவே திகழ்ந்து வந்தார். தூத்துக்குடியில் திமுகவை வளர்த்ததில் அவரது பங்கு அளப்பரியது. தூத்துக்குடிக்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது கொண்டு வந்த திட்டங்கள் சொல்லில் அடங்காது. கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்டவர்.

அவரது இழப்பு தூத்துக்குடிக்கு மாபெரும் இழப்பு, இந்த மண்ணைவிட்டு பிரிந்து நாளையோடு 8 ஆண்டுகள் ஆகிறது. அவரை பிரிந்து நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவரது குடும்பங்கள், மற்றும் தூத்துக்குடி பொதுமக்கள், அவரால் வாழ்க்கை பெற்ற அரசியல் அடையாளங்கள், தொழிலதிபர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், மாநகர அணி அமைப்பாளர்கள், கழக செயல்வீரர்கள் உட்பட அனைவருக்கும் அவரது தியாகத்தை நினைவு கூர்ந்து  "செய்தி களம்" நியூஸ் வெப்சைட் குழுமம் சார்பில் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துகிறது.

அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்று வாழ்கிறார்.