பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பெருமதிப்பிற்குரிய திரு. H. ராஜா அவர்களை, KGF நிறுவனர் எழுத்தாளர் பெ. செந்தில்குமார் இன்று (22.09.2025) சந்தித்து மகிழ்ந்தார்.
இந்த சந்திப்பிற்கு ராஜபாளையம் சுகந்தம் திரு. N.S. ராமகிருஷ்ணன் அழைத்து சென்றார். வடபழனியில் உள்ள H. ராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அரசியல், வரலாறு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுமார் ஒரு மணி நேரம் உரையாடல் நடைபெற்றது.
"பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூலைப் பற்றிய விழிப்புணர்வும், அதற்கான வெளீயீட்டு நிகழ்வுகளும் குறித்து ஏற்கனவே H. ராஜா அவர்கள் அறிந்திருந்ததாகவும், அந்த நூலை நேரடியாக எழுத்தாளரிடமிருந்து பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் மேதகு ஆளுநர் திரு. R.N. ரவி அவர்களின் பண்புகள் மற்றும் சிறப்புகள் குறித்து H. ராஜா பாராட்டிப் பேசினார். அத்துடன், தற்போது நடைபெற்று வரும் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் – பாகம் 2 நூல் தயாரிப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அடுத்தடுத்த வெளீயீட்டு விழாவில் தாங்களும் கலந்துகொள்ள வேண்டும் என எழுத்தாளர் அழைப்பு விடுத்ததற்கு H. ராஜா அவர்கள் உறுதியாக சம்மதித்தார்.
தூத்துக்குடி
பா.ஜ.க முன்னணி தலைவர் H.ராஜாவை சந்தித்தார் எழுத்தாளர் பெ.செந்தில்குமார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் பேரணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு!!
அடுத்த
அத்திமரப்பட்டி – முள்ளக்காடு பகுதியில் மழைக்கு முன் வடிகால் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026