மதுரை பிரம்மா குமாரிகள் துணை மண்டலம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேரணி செப்டம்பர் 8ஆம் தேதி மதுரையில் இருந்து துவங்கி பல்வேறு இடங்களைச் சுற்றி வந்தது. இப்பேரணி சனிக்கிழமை (25.09.2019) மாலை 6.00 மணியளவில் தூத்துக்குடி வந்தடைந்தது.
தூத்துக்குடி பிரம்மா குமாரிகள் கிளை நிலையம் ஓம் சாந்தி தியான மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், பேரணியை நமது மாநகரில் துவக்கி வைக்கும் முகமாக ஸ்டீபன் மாஸ்டர் (மாவட்ட பேராவிளையாட்டு துறை செயலாளர்), ஷெர்லி மேடம் (மாற்றுத்திறனாளி மகளிர் அணி தலைவி), மோசஸ் (அமர்வு கைப்பந்து கழகம்) ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். விழாவை முன்னிட்டு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுத்தொடர் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பேரணியின் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, அனைவரிடமும் சம உரிமையுடன் வாழ வழிவகை செய்வதாகும்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் பேரணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக – அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம்!!
அடுத்த
பா.ஜ.க முன்னணி தலைவர் H.ராஜாவை சந்தித்தார் எழுத்தாளர் பெ.செந்தில்குமார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026