தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அணி மற்றும் பிரிவு தலைவர்களுக்கான அறிமுக கூட்டம் இன்று (22.09.2025) திங்கட்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையின் ஒப்புதலோடு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அறிமுக கூட்டத்தில், அணியைச் சேர்ந்த 7 மாவட்ட தலைவர்களும், பிரிவைச் சேர்ந்த 24 மாவட்ட தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் கே.என்.ஆர். பரமசிவம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் மற்றும் செயலாளர்களான முத்துராமலிங்கம், சிவராமன், மாசாணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அணி மற்றும் பிரிவு தலைவர்களுக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள், கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.