தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டுக்கு உட்பட்ட சாந்தி நகர் முழுவதுமாக குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததின் காரணமாக நீண்ட நாட்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு, அதிரடியாக இன்று சாந்தி நகர் 1 மற்றும் 2 வது தெரு வால்வுகளை சரி செய்யவும், குடிநீர் குழாய்களை சரி செய்து அடைப்புகளை அகற்ற உத்தரவிட்ட மேயர் அவர்களுக்கு 50 வது வார்டு பகுதி பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் சரவணகுமார் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.



பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடி தீர்வு ஏற்படுத்தி கொடுத்து இப்பொது 50 வது வார்டு பகுதிகளில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் குடிநீர் சீராக கிடைக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து சாந்தி நகர் 1 & 2 ஆகிய பகுதிகளில் "HDPE 4" மெயின் குடிநீர் குழாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பு காரணமாக நீண்ட நாட்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு இன்று வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அதிரடி உத்தரவால் தீர்வு காணப்பட்டது.
 


கல்குவியல் அடைப்பு அகற்றப்பட்டது. வால்வு அடைப்பு திறப்பு சீர் செய்யபட்டது. அதன் பின், முதல் சோதனை ஓட்டத்தில் குடிநீர் சீராக கிடைத்து வருகிறது. 50 வது வார்டு பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.