ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அளித்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பில் சாமு. காந்தி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்யிடம் நேரிலும் மற்றும் தமிழக முதல்வருக்கு தபால் மூலமும் மனு அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்ததாவது :-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தங்களுடைய ஆட்சி காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின்  சிறப்பான வாதத்தின் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் அதற்கு முதலில் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாக தங்களுக்கு நன்றி கூறுகிறோம்.

தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக ஆலை நிர்வாகம் சார்பாக ஓய்வு பெற்ற இரண்டு சுற்றுச்சூழல் பேராசிரியர்கள் கணபதி யாதவ் மற்றும் நாகேந்திரன் ஆகியோரை பயன்படுத்தி ஸ்டெர்லைட் நிறுவனம் பசுமை மீள் தொடக்கம் என்ற பெயரில் மீண்டும் ஆலயை திறப்பதற்காக தங்களிடம்  மனு கொடுத்திருப்பதாக செய்தி மற்றும் ஊடகம் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த அறிக்கையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மதள்ளுபடி செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை சார்பாக இரண்டு பேராசிரியர்கள் கொடுத்த மனுவை தள்ளுபடி செய்வதற்கு கீழ்க்கண்ட காரணங்களை எனக்கு தெரிந்த அளவில் தங்களிடம் மனுவாக தாக்கல் செய்கிறேன். இதை தாங்கள் அரசு பரிசீரிக்கும் என்ற நம்பிக்கை உடன்

காரணம் : 1
 
உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முக்கிய காரணமாக நீர் மாசுபடுத்துதல் சிப்ஸம், காப்பர் கழிவுகளை கையாண்ட முறை தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளது. அதற்கு இரண்டு பேராசிரியர்களும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை,

ஸ்டெர்லைட் ஆலையின் உடைய காப்பர் கழிவுகள் ஆலைக்கு அருகில் உள்ள (உப்பாற்று ஓடை) புதுக்கோட்டை பாலத்திற்கு கீழே அருகில் பல லட்சம் தன் கழிவுகளை கொட்டி பாலத்தில் செல்லும் தண்ணீர் நீர் ஓட்டத்தை தடுத்திருக்கிறார்கள் பாலத்தில் உள்ள பல மதகுகள் அடைக்கப்பட்டுள்ளன பாலத்தின் கீழே தண்ணீர் செல்ல முடியாமல் மழை நேரங்களில் அந்தத் தண்ணீர் தூத்துக்குடி நகருக்கு உள்ளே வந்து தூத்துக்குடி மக்களுக்கு கடந்த காலங்களில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது. என்பதை நாடு அறியும் ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் கழிவுகளால் நீரோட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மழை நேரத்தில் இந்த புதுக்கோட்டை பாலத்தின் அடிப்பகுதி வழியாக செல்லும் நீர் கோரம்பள்ளம் கண்மாய் மற்றும் பல பகுதிகளுக்கு சென்றடைகிறது.

இந்த நீரில் ஸ்டெர்லைட் ஆலையின் உடைய கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகளும் தண்ணீரில் கலந்து அந்த நீர் முற்றிலும் மாசடைகிறது. இந்த நீரை பயன்படுத்தி பல பகுதிகளில் உள்ள மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த காப்பர் கழிவுகளால் கலக்கப்பட்ட நீரால் உற்பத்தி செய்யப்படும் நெல், வாழை, பழம் விவசாய பொருள்கள் சுவை கம்மியாகவும், தரம் இல்லாமலும் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே இப்போது பசுமை மீள் தொடக்கம் என்று அறிக்கை தயார் செய்து இருக்கும் இரண்டு பேராசிரியர்களும் இந்த காப்பர் கழிவுகள் பற்றி எந்த விளக்கம் பதில் தெரிவிக்கவில்லை இந்த காப்பர் கழிவுகளை எப்போது எப்படி நிர்வாகம் அப்புறப்படுத்தும் என்றும் கூறப்படவில்லை ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் தூத்துக்குடி நகரின் பல்வேறு இடங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையின்  காப்பர் கழிவுகள் இன்று வரை கொட்டப்பட்டது. அப்புறப்படுத்தப்படவில்லை இதற்கு ஆலையால் நிறுவப்பட்டுள்ள பேராசிரியர்கள் கணபதி யாதவ் மற்றும் நாகேந்திரன்  ஆகியோர் எந்த பதிலும் தெரிவிக்காமல் ஆலை நிர்வாகம் தயார் செய்து கொடுத்த அறிக்கையை அப்படியே தங்களிடம் வழங்கி இருக்கிறார்கள் அதை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.

 காரணம் : 2

1996 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டபோது ஆண்டு ஒன்றிற்கு 40 ஆயிரம் டன் காப்பர் உற்பத்திய செய்யப்படும் என்று அனுமதி பெறப்பட்டிருக்கிறது பின்பு அந்த ஆளை நிறுவனம் ஆண்டுக்கு 4 லட்சம் டன் வரை காப்பர் உற்பத்தி செய்து இருக்கிறது. 40 டன் உற்பத்தி செய்யும் போது அந்த ஆலையினுடைய புகை குளாய் சிமிலி உயரம் 60 மீட்டர் என குறிப்பிடப்பட்டு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. பின்பு 4 லட்சம் டன் உற்பத்தி செய்யும் பொழுதும் 60 மீட்டர் உயரத்திலே உள்ள புகைகுழாயை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் 4 லட்சம் டன்  உற்பத்தி செய்யப்படும்போது அந்த போருக்குழையின் உடைய உயரம் 100 மீட்டருக்கு மேலே இருக்க வேண்டும் 100 மீட்டர் உயரம் அமைக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் போதுமான இடம் இல்லை என்று சில வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதை ஆலை நிர்வாகம் முற்றிலும் மீறி உள்ளது இந்த வாதம் உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆலையை மூடுவதற்கு இதுவே போதுமான காரணமாகும்.

காரணம் : 3
 
ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் தொடங்குவதற்கு முதலில் அனுமதி கொடுத்த விதிமுறைகள் முற்றிலும் தவறாக உள்ளது. கடற்கரை உயிரினங்கள் வாழும் பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு தள்ளி தான் இது போன்ற ஆலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளதாகவும் அதை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியை போன்று வளர்ந்து வரும் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் மக்கள் நிறைந்த இடங்களில் ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி இருக்க கூடாது என்றும், நகர் மற்றும் ஊர்மைப்பு சட்டப்படி அபாயகரமான தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் இதுபோன்று ஆலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. அந்த விதிமுறையும் மீறி ஸ்டெர்லைட் நிறுவனம் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலையை மூடுவதற்கு இதுவும் போதுமான காரணமாகும்.

 காரணம் : 4

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி சுமார் 500 மீட்டர் சுற்றளவுக்கு மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளது ஆனால் ஆலை நிர்வாகம் 25 மீட்டருக்கு மட்டும் மரங்கள் வைத்திருக்கிறது. இந்திய அரசு இதற்கும் பல விதிமுறைகளை தளர்த்தி கொடுத்திருக்கிறது. 500 மீட்டர் சுற்றளவுக்கு மரங்கள் வைப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் இட வசதி இல்லை என்று தெரிய வருகிறது. இதுவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போதுமான காரணம் என்று தெரிய வருகிறது.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஆகும் ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக கையகப்படுத்திய சுமார் 242 ஏக்கர் நிலங்களுக்கு நியாயமான விலை கொடுக்கப்படவில்லை 2008 ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் மட்டும் கிரைய தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லட்சத்து 50 ஆயிரம் கிரையத்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக தெற்கு வீரபாண்டியபுரம், ஏ குமரட்டியபுரம், குமரகிரி மற்றும் சுற்று வட்டார மக்கள் பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசு இதுவரை கண்டும் காணாமலும் இருக்கிறது. ஸ்டெர்லைட் நிர்வாகமும் எந்த வகையிலும் இந்த இடம் கொடுத்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை கடந்த அரசு இந்த மக்களிடமிருந்து இந்த மக்களுக்கு சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுத்திருக்கிறது தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்த இடம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது எனவே ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக கையகப்படுத்தி இடத்தை அந்த மக்களிடம் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் அந்த மக்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 20 லட்சம் வழங்க வேண்டும்.
 
தமிழக முதல்வர் அவர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது தமிழக அரசினுடைய சிறப்பான வழக்கறிஞர் மூலம் பல்வேறு சிறப்பான வாதத்தின் மூலமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது அதை இன்றைய தமிழக முதல்வர் அவர்களும் வரவேற்றார்கள் அதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழ்நாடு மக்கள் நிலை இயக்கம் சார்பாகவும் ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பாகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதை போன்று மீண்டும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை மீள் தொடக்கம் என்ற முறையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் வல்லுனர்களை பயன்படுத்தி ஆலைக்கு சாதகமாக அறிக்கையை தயார் செய்து பல உண்மைகளை மறைத்து தாங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள் அதை முற்றிலும் தள்ளுபடி செய்து மீண்டும் தமிழ்நாட்டில் சிறப்பாக தங்கள் ஆட்சி புரிய வேண்டும். அதற்கு தூத்துக்குடி மக்கள் சார்பாக தங்களுக்கு வாழ்த்தையும் நன்றியும் தெரிவிக்கிறோம் ஸ்டெர்லைட் நிகழ்வில் கடந்த காலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அரசு செய்த தவறான ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தவறான கொள்கை மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தாங்கள் அரசு பதவி ஏற்ற பின்பு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசினுடைய சிறப்பான வாதத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் நாங்களும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம்.

எனவே தாங்கள் அந்த பேராசிரியர்கள் கொடுத்த பசுமை மீள் தொடக்கம் மனுவை தள்ளுபடி செய்து ஸ்டெர்லைட் ஆலைக்காக இடம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடும் அந்த இடத்தையும் திருப்பி வழங்க தாங்கள் அரசு உத்தரவு பிறப்பிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.