தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆனது சண்முகபுரம் பகுதி வானில் ஸ்டோர் அருகில் நேற்று மாலை நடைபெற்றது.

சண்முகபுரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யகாந்த் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.கே. பிரதீப், ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், ரவி, பிரவீன்குமார், முகமது ஜெயலாப்தீன், சண்முகபுரம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வசுபாஷ், காஜா முஹைதீன், ஆலிவர் அலாய் ஸ்டெபின், முகமது பாசில், பெத்துகணேஷ், பால செல்வகுமார், ஈனமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ் அருண் சுந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான கீதா ஜீவன், சரத்பாலா, இருதயராஜ், சஞ்சய், மதியழகன், ஆனந்த சேகரன், ஜெகன் பெரியசாமி, அன்பழகன், சுரேஷ்குமார், ஜெனிட்டா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது கலைஞரால் தான் தமிழ் மொழிக்கு வளர்ச்சி, தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு வளர்ச்சி அப்படின்னு சொல்லும்போது யாரு அதை மறுக்க முடியாது. நம்முடைய முதல்வர் தளபதியார் அவர்கள் கலைஞர் வழியிலே கலைஞருடைய ஆட்சி நல்லாட்சி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
அவருடைய சாதனைகளை பார்த்தீங்கன்னா இன்னைக்கு தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்குது. தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்று நம்முடைய தளபதி யார் சொல்லவில்லை, நானோ சொல்லவில்லை, ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் சொல்கிறது .
வறுமைக்கோட்டு பட்டியலில் உள்ளவங்க தமிழ்நாட்டில் மிக குறைவு, சிசு மரணம் தமிழ்நாட்டில் குறைவு, அதை போல் தமிழ்நாட்டில் நம்முடைய தனிநபரின் வருமானம் அதிகரிச்சிருக்கு, உயர்கல்வி அதிகரிச்சிருக்கு தொழில் முனைவோராக பெண்கள் அதிகமாக திகழ்கிறார்கள். தமிழ்நாட்டில் உழைக்கும் மகளிர்கள் 41% சதவீதம் மகளிர் இருக்கிறோம். இப்படி நாம் தமிழ்நாட்டை பற்றி சொல்லி கொண்டே போகலாம். 
பாஜக அரசின் ஒரே கொள்கை மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடாது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மீண்டும் அதிக இடத்தில் ஜெயிக்க கூடாது. நம்முடைய தளபதியார் மீண்டும் முதலமைச்சர் ஆக விடக்கூடாது என்பதே பாஜக அரசின் ஒரே இலக்கு,
அதோடு இந்த மாதம் ஜூலை கடைசி வாரத்தில் இருந்து மார்ச் மாதம் வரைக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மல்டி ஸ்பெஷாலிட்டி முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். உயர்ரக மருத்துவம் அதாவது நரம்பியல் சம்மந்தமான, வியாதிகள் மூளை, சிறுநீரகம், இருதயம், கேன்சர் போன்ற வியாதிகளின் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 
இந்த முகாமானது சனிக்கிழமை தோறும் நடக்க இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இந்த மருத்துவ முகாமினை பற்றி பெரியதாக விளம்பரம் பண்ணி இந்த முகாமை நடத்துவோம். நம்முடைய முதலமைச்சர் "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற ஒரு திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 1200 க்கு மேல் முகாம்கள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அத்தனை பேரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் தமிழன் உலகமெங்கும் பரவி இருக்கிறானே சுயமரியாதை எல்லாம் பேசுகிறானே அப்படின்னு சொல்லிட்டு ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது. ஆகவே நாம் அத்தனை பேரும் தமிழ்நாட்டை பாதுகாக்க மீண்டும் இந்த முறையும் நாம் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்ற முறையிலே நம்முடைய பிரச்சார பயணத்தை தொடங்குவோம் தலைவரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என்று பேசினார்.
மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கோட்டுராஜா, ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ரவீந்திரன், ஜான் அலெக்சாண்ட,ர் ஏசுதாஸ், கீதா.முருகேசன், கனகராஜ், பிரமிளா, அனந்தையா, மீனாட்சி சுந்தரம், ஏசுவடியான், ராஜ்குமார், கலைச்செல்வி, அன்னலட்சுமி, உட்பட சண்முகம் பகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட திமுக கழக செயல்வீரர்கள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
