ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வார்டு எண்.1 பண்டாரம்பட்டி பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைந்த மின் அழுத்தப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், முனியசாமி கோவில் தெரு மற்றும் இசக்கியம்மன் கோவில் தெருவில் தலா 100 KVA திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
இந்த புதிய மின்மாற்றிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா இயக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் அப்பகுதி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உமையொரு பாகம், உதவி பொறியாளர் ஜோசப், கிராம நிர்வாக அலுவலர் சிவகுருநாதன், பகுதி செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பூவேஷ்நாதன், தர்மராஜ், பகுதி பொருளாளர் துரைராஜ், வட்ட செயலாளர்கள் ராஜன், தெய்வேந்திரன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் அலெஸ்க், பகுதி மாணவரணி அமைப்பாளர் அன்புமணி, பகுதி பொறியாளர் அணி தர்மராஜ் உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.