ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வார்டு எண்.1 பண்டாரம்பட்டி பகுதியில், தாட்கோ நிதியின் கீழ் 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல் தளத்துடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்தார்.
இந்த சமுதாய நலக்கூடம் பொதுமக்களின் சமூக, பண்பாட்டு மற்றும் நலச்செயல்பாடுகளுக்கு பயன்படும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ உதவி பொறியாளர் பால்பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுருநாதன், பகுதி செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பூவேஷ்நாதன், தர்மராஜ், பகுதி பொருளாளர் துரைராஜ், வட்ட செயலாளர்கள் ராஜன், தெய்வேந்திரன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் அலெஸ்க், பகுதி மாணவரணி அமைப்பாளர் அன்புமணி, பகுதி பொறியாளர் அணி தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்று, இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர்.