தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முள்ளக்காடு பகுதியில் தூத்துக்குடி பிளை ஏஸ் மூவர்ஸ் அசோசியேஷன் சார்பாக சமத்துவ பொங்கல் விழா, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழாவில் கலந்து கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றினார். அவர் தனது உரையில் சமத்துவம், சமூக ஒற்றுமை மற்றும் பொது விழாக்களின் சமூகப் பொறுப்பு குறித்து பேசினார். குறிப்பாக சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதன் அவசியம், விபத்துகளை தவிர்ப்பதில் ஓட்டுநர்களின் பங்கு குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து சங்கம் சார்பாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் பிரபு, வாகன ஆய்வாளர் பாத்திமா ஃபரின், முன்னாள் ட்ராபிக் வார்டன் கமலகண்ணன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


மேலும் தூத்துக்குடி பிளை ஏஸ் மூவர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுதேஷ்ராஜ், பொருளாளர் தினகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


சமத்துவ பொங்கல் விழா மூலம் சமூக ஒற்றுமை வலுப்பெற்றதுடன், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே பரவலாக ஏற்படுத்தப்பட்டது.