தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் வைப்பார் கிராமத்தில் இராஜகம்பள மகாஜன சங்கம் சார்பில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 5ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.


இந்தப் போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. G.V. மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, இளைய ஜமீன்தார் செந்தில்குமார், விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்கம்மாள், ராமர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சன்னாசி, கிராம பொருளாளர் ராஜா, செயலாளர் சிவப்பு ராஜா, துணைத் தலைவர் முருகமல்லுச்சாமி, திமுக கிளைச் செயலாளர்கள் பாலமுருகன், ஆதித்யன், பால்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் தியாகமும் நினைவுகூரப்பட்ட இந்த விழா, பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் உற்சாகமாக நடைபெற்றது.