தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதி 20-வது வார்டிற்குட்பட்ட பாகம் எண் 89-ல், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” திட்டத்தின் கீழ் பாகமுகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நந்தகோபாலபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சி.என்.ஆர். காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு வட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான திரு. இரவீந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் பாகமுகவர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.


கூட்டத்தில் வட்ட செயலாளர் திரு. முனியசாமி, நிர்வாகிகள் காளிமுத்து, முருகேசன், முத்துவீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாகமுகவர்கள் ஸ்ரீதரன், சுரேஷ், சிவகுருசாமி, இசக்கிராஜன், கன்னியப்பன், சுப்பிரமணியன், நட்சத்திரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் மூலம் வாக்குச்சாவடி பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வெற்றியை உறுதி செய்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.