தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியாய விலை கடை தொடங்கப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இந்த கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இந்த புதிய ரேஷன் கடை மூலம் கீழ ரங்கநாதபுரம், மேல ரங்கநாதபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி தொடர்ச்சி மற்றும் வரதராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பயன்பெற உள்ளனர். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் எளிதில், நேர்மையாக கிடைப்பதோடு, பொதுமக்களின் பயண நேரமும் குறையும் என தெரிவிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, வட்டச் செயலாளர் சக்திவேல், தொழிலதிபர் தெய்வநாயகம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சோமநாதன், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், பாக டிஜிட்டல் முகவர் மாரிமுத்து, வட்டப் பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதிய நியாய விலை கடை தொடங்கப்பட்டதற்கு அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்தனர்.