திமுக எம்பி திருச்சி. சிவா கர்ம வீரர் காமராஜர் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். திருச்சி சிவா தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லாதபட்சத்தில் ஒட்டுமொத்த மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தூத்துக்குடியில் உள்ள சங்க அலுவலகத்தில் வைத்து இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அப்போது அவர் கூறும்போது திருச்சி சிவா எம்பி பெருந்தலைவர் காமராஜர் பிரச்சார பயணங்களில் ஒய்வு எடுப்பதற்காக பயணியர் விடுதிகளில் தங்கும் போது அனைத்து விடுதிகளிலும் குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர் கலைஞர் என்றும், இல்லையென்றால் அவரது உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றும், காமராஜர் இறப்பதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கரங்களை பிடித்து கொண்டு இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக இதுவரை யாரும் சொல்லாத உண்மைக்கு புறம்பான கட்டுக்கதையான தகவல்களை சொல்லி இருக்கிறார் எம்பி திருச்சி சிவா, இது கடுமையான கண்டனத்திற்குரியது.
பெருந்தலைவர் காமராஜர் இறப்பதற்கு முன்பு வரை அவரது சட்டை பையில் 150 க்கும் குறைவான பணம் இருந்ததை இந்த நாடு அறியும், அவர் இறக்கும்வரை ஏழ்மையாகவே வாழ்ந்து வந்தவர். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள் கட்டப்பட்டு இருக்கிறது. பல தொழில் ஆலைககளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர் கர்ம வீரர் காமராஜர்,
இன்றுவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கூறி கொண்டு வருகிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் 9 ஆண்டுகாலம் நேர்மையான ஆட்சி செய்து வந்தவர். பிரதமர் பதவியை கூட தூக்கி எறிந்தவர் காமராஜர், இரண்டு பாரத பிரதமர்களை உருவாக்கியவர் பெருந்தலைவர் காமராஜர், கல்வி கண் திறந்த கர்ம வீரர் என்று எல்லா மக்களாலும் போற்றப்பட்டவர்.
குழந்தைகள் நன்கு படித்து இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு வித்திட்டவர். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்துவதற்கு போதிய நிதி அரசிடம் இல்லாத பட்சத்தில் குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக தமிழகம் முழுவதும் பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியவர் கர்ம வீரர் காமராஜர்,
இப்படி ஏழ்மையாக வாழ்ந்து வந்த பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கலைஞர் கருணாநிதி முரசொலி நாளிதழில் காமராஜரை பற்றி இழிவாக பேசியதில் தொடங்கி தற்போது வரை காமராஜர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த துடிக்கும் இந்த திமுக அரசிற்கு வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். காமராஜர் சாதி தலைவர் அல்ல, சாதித்த தலைவர், எல்லோருக்காமான தலைவர், காமராஜர் ஆட்சி காலத்தில் அனைத்து சமூக மக்களும் பயன் பெற்று இருக்கிறார்கள்.
இப்படி எல்லோராலும் போற்றி புகழக்கூடிய பெருந்தலைவர் காமராஜரை வேண்டும் என்றே அவரது புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிட மாடல் அரசு கலைஞரில் தொடங்கி தற்போது வரை அற்பத்தனமான அரசியல் செய்து காமராஜரை இழிவு படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
திருச்சி சிவா எம்பி பேச்சுக்கு இதுவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கவில்லை, இதுவரை எந்த ஒரு கண்டன அறிக்கையும் தெரிவிக்காமல் முதல்வர் ஸ்டாலின் மௌனம் சாதிப்பதால் ஒட்டுமொத்த மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் திருச்சி சிவா பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு திருச்சி சிவா வகித்து வரும் திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், எம்பி பதவியில் இருந்தும் நீக்கம் செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் ஒட்டு மொத்த மக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தூத்துக்குடி
திருச்சி சிவா எம்பி பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு முன்னெடுக்கும் - நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் பரபரப்பு பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மூன்றாம் நாள் நடைபெறுகிற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்!!
அடுத்த
திராவிட மாடல் அரசு பரதவர் மீனவ சமூக மக்களை போராட்ட களத்திற்கு தூண்ட வேண்டாம் - தூத்துக்குடியில் பாண்டியாபதி பரதவர் நல தலைமை செயலகம் பொதுச் செயலாளர் இன்னாசி செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026