பாண்டியாபதி பரதவர் நல தலைமைச் செயலகம் பொதுச் செயலாளர் இன்னாசி தலைமையில் நிர்வாகிகள் கூட்டாக நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள சங்க அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் கூறுகையில் இரு தினங்களுக்கு முன்பாக தமிழக அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. கடற்கரையோர பகுதியில் 8 இடங்களை தேர்வு செய்து சிறிய துறைமுகங்கள் அமைக்க இருப்பதாக தகவல் ஒன்றை அறிவிப்பாக வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை பரதவர் மக்கள் சார்பில் வண்மையாக கண்டிக்கின்றோம்.
திமுக பொறுபேற்று நான்கு ஆண்டுகளாக தமிழக அரசாங்கம் எங்களது பாரம்பரிய மீனவ சமுதாய பரதவர் மக்களை வஞ்சிக்கும் விதமாக தொடர்ச்சியாக பரதவர்கள் இனத்து சமூக மக்களை வஞ்சிப்பு செய்து கொண்டே இருக்கிறது.
எங்கள் பரதவர் மக்கள் ஒவ்வொரு காலமும் போராடிக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழக அரசால் மனப்பாடு கன்னியாகுமரி தூத்துக்குடி குமரி விழுப்புரம் மரக்காணம் கடலூர் சிரஞ்சிமங்கலம் மயிலாடுதுறை வானகிரி நாகை விழுந்தமாவடி இப்படி 8 இடங்களில் குறிப்பாக முழுக்க முழுக்க பாரம்பரிய மீனவர்கள் வாழக்கூடிய இந்த கடற்கரை பகுதிகளில் வசித்து வரும் பரதவர் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவிப்பு செய்து வஞ்சித்து வருகிறது.
இந்த மக்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு கொடிய செயலை செய்து கொண்டே இருக்கிறது. இந்த திராவிட மாடல் அரசு இதை எங்களது பாண்டியபதி பரதவர் நல தலைமைச் செயலகம் வன்மையாக கண்டிக்கிறது. வரக்கூடிய காலங்களில் தூத்துக்குடி மாநகரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் பரதவர் மீனவ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது என திட்டமிட்டு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
குலசேகரன்பட்டினம் பகுதியில் ஏவுகணை தளம் அமைப்பதை எங்கள் மக்கள் எதிர்த்தார்கள். எங்கள் மக்களை பற்றிய எந்த சிந்தனையும் இந்த தமிழக அரசுக்கு கிடையாது. தொழில் வளங்களை அழிச்சு துறைமுகங்கள் அமைப்பதற்கான காரணம் இந்த அரசுக்கு ஏன் என்று நாங்கள் கேட்கிறோம். முதல்வர். மு.க. ஸ்டாலின் அவர்களே தாங்கள் தற்போது "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை அறிமுகம் செய்து இந்த திட்டத்தின் மூலம் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்கும் திராவிட மாடல் அரசானது கடற்கரை கிராம மக்கள் வசிக்கும் இடத்திற்கு நேரடியாக போய் சந்தித்து கருத்து கேளுங்க,
நீங்க நேரடியாக வந்து கருத்து கேட்டு இந்த திட்டத்தை மக்கள் ஏற்று கொண்டார்கள் என்றால் இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துங்கள். இந்த அரசாங்கத்தின் மேல் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் இருக்கு ஏன்னு கேட்டீங்கன்னா ஒரு பாரம்பரிய மீனவரை தமிழ்நாடு மீன்வளத் துறையில் அமைச்சராக போடலை என்கிற சந்தேகங்களும் ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கு,
நாங்க ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த விஷயத்தை தமிழகம் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தி வருகிறோம். மாற்று சமூகத்தை சார்ந்த நபர்களை இந்த துறைக்கு அமைத்து வருகிறீர்கள். இந்த திராவிட மாடல் அரசாங்கம் தான் இப்படி செய்கிறது. வேறு எந்த அரசாங்கம் இப்படி செய்யவில்லை, திட்டமிட்டே பரதவர் சமூகத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிட மாடல் அரசாங்கம் செயல்பட்டு கொண்டு வருகிறது.
ஆகவே மீனவர் சமூகத்தை சேர்ந்த பாரம்பரிய பரதவர் மக்களில் ஒருவரை மீன்வளத்துறை அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும். தமிழகத்தில் கடலோர பகுதிகளில் 8 இடங்களில் சிறிய துறைமுகங்கள் அமைப்பதற்கு அரசு அறிவித்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் வரக்கூடிய தேர்தலில் எங்கள் சமூக மக்கள் அனைவரும் இந்த அரசுக்கு எதிராக வீடு வீடாக வீதி வீதியாக சென்று திராவிட மாடல் அரசினுடைய சதி திட்டங்களை நாங்கள் அம்பலப் படுத்துவோம்.
இதை நாங்கள் சும்மா விட போறதாக இல்ல ஒட்டுமொத்த மக்களை இணைத்து ஓரிரு வாரங்களில் தூத்துக்குடியில் தமிழ்நாடு பாண்டிச்சேரி எங்கள் மீன சமூகத்தினுடைய தலைவர்களை இணைத்து மிகப்பெரிய ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். அனைத்து ஊர் நல கமிட்டியினர், அனைத்து சமுதாய தலைவர்கள் தேவைப்பட்டால் எங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய எதிர் கட்சிகளையும் இணைத்து மிகப்பெரிய அளவில் இந்த போராட்டம் நடத்துவோம் என்று தமிழக அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.
நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்றோம். தமிழக முதல்வர் உடனடியாக எங்களது பாரம்பரிய மீனவருடைய கோரிக்கையை ஏற்று உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதையும் மீறி இதை தாங்கள் செயல் படுத்துவீர்கள் என்றால் தமிழக முழுக்க 15 கடற்கரை மாவட்ட பரதவர் சமுதாய மக்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்களையும் அதையும் தாண்டி சென்னையில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை அங்கு வாசிக்கக் கூடிய எங்கள் சமுதாய தலைவர்களை இணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் நடத்துவோம். அதனால் தயவு செய்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். என்று மீண்டும் மீண்டும் நாங்கள் உங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம். என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
பேட்டியின் போது துணை தலைவர் அந்தோணி சாமி, முத்து குளித்துறை பரதவர் சங்க செயலாளர் கனகராஜ், தலைமை செயலகம் நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, ஜான்சன், செல்வம், பாரத், ராஜ், விஜயகுமார், ஜெகன் எம்.ஏ., ஆனந்தி, அனுசியா, பிரசாத் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
திராவிட மாடல் அரசு பரதவர் மீனவ சமூக மக்களை போராட்ட களத்திற்கு தூண்ட வேண்டாம் - தூத்துக்குடியில் பாண்டியாபதி பரதவர் நல தலைமை செயலகம் பொதுச் செயலாளர் இன்னாசி செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்சி சிவா எம்பி பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு முன்னெடுக்கும் - நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் பரபரப்பு பேட்டி!!
அடுத்த
தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்சி என். ஆனந்துக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026