தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் 2 ம் கேட் அருகில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மூன்றாவது நாள் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தாசில்தார் முரளிதரன், துணை ஆணையர் சரவணக்குமார், கிழக்கு மண்டலம் உதவி ஆணையர் வெங்கடாசலம், சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ராமு அம்மாள், சரண்யா ராஜ்குமார், தனலெட்சுமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து முகாமில் பொதுமக்கள் அளித்த சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை அமைச்சர் பொதுமக்களிடம் வழங்கினார்.
