பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டலத்தின் பொன் விழா மற்றும் பிரம்மா குமாரிகள் தூத்துக்குடி கிளை நிலையத்தின் மாணிக்க விழா நிகழ்ச்சி 19 ஜூலை 2025 சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் தாத்துக்குடி V.E ரோட்டில் அமைந்துள்ள அழகர் திருமண மஹாலில் வைத்து வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதனை சிறப்பிக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை தாங்க இருப்பதாகவும், நமது மதுரை துணை மண்டல பிரம்மா குமாரிகள் இயக்குனர் இராஜயோகினி, பிரம்மா குமாரி உமா சகோதரி ஆகியோர் ஆசியுரை வழங்க உள்ளார்கள். பிரம்மா குமாரிகளின் தலைமையகம் மவுண்ட் அபு இராஜஸ்தானில் பிரம்மா குமாரிகள் பண்புக்கல்வி நிகழ்வுகளின் இயக்குனராக செயலாற்றும் இராஜயோகி Dr.B.K. பாண்டிய மணி சகோதரர் அவர்கள் சிறப்புரை வழங்க உள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து பிரம்மா குமாரிகளின் தலைமையகம் மவுண்ட் அபு இராஜஸ்தானில் பிரம்மா குமாரிகள் பண்புக்கல்வி நிகழ்வுகளின் துணை இயக்குனராக செயலாற்றிவரும் இராஜயோகி B.K. ஜெயக்குமார் சகோதரர் அவர்கள் கருத்துரையாற்ற உள்ளார்கள்.

மேலும் சிறப்பு விருந்தினர்கள்,
K.அனந்த இராமானுஜம் தலைமை நிர்வாக அதிகாரி, NLC Tamil Nadu Power Ltd., தூத்துக்குடி, க. கணேசன் மாவட்ட அலுவலர், தீயணைப்பு மீட்புப்பணி துறை, தூத்துக்குடி,
T.வேல் சங்கர் Chairman, The Vikasa School, தூத்துக்குடி, Rev. Br. Albert Xaviour A, SHJ Founder, SMILE Organisation, ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டல மூத்த ராஜயோக ஆசிரியை இராஜயோகினி B.K. செல்வி சகோதரி தியான அனுபவம் செய்விக்க உள்ளார்கள். மேலும் தூத்துக்குடி சிவாஞ்சலி நாட்டியாலயா மாணவர்கள் தங்கள் நாட்டிய நடனத்தினால் மகிழ்விக்க உள்ளார்கள்.

இந்தப் பொன் விழாவை ஒட்டி தொடங்க உள்ள திட்டங்கள்:
காலத்தின் அழைப்பு (Call of Time) ஆன்மீக எழுச்சி ; ஆக்கபூர்வ முயற்சி (RISE) டிஜிட்டல் வெல்னஸ் (Digital Wellness) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு (Environmental Awareness) போதையற்ற தமிழகம் (Drug Free Tamilnadu) பொன்விழா ஆண்டு கொள்கை அறிக்கை 2025 இவ்விழாவில் சுமார் 600 பேர் பங்கேற்க உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (20.07.2025) அன்று P&T Colony 12 வது தெருவில் அமைந்திருக்கும் தூத்துக்குடி பிரம்மா குமாரிகள் ஓம் சாந்தி தியான மண்டபத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பிரம்மாகுமார் பிரம்மாகுமாரிகள் ஒருங்கிணைந்து உலக அமைதிக்காக கூட்டு தியானமும் நடைபெற உள்ளது.