மத்திய அரசை கண்டித்து ஜூலை 9 ம் தேதியான இன்று நாடு தழுவிய அகில இந்திய பொது வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.



அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎஃப், ஹச் எம்எஸ், ஏஐசிசிடியு, யுடியுசி, மற்றும் எம்.எல்.எப் சார்பில் பொது வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தொழிற்சங்க நிர்வாகிகள், மற்றும் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தடையை மீறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


இதனால் தடையை மீறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். சாலையில் அமர்ந்து நடைபெற்ற மறியல் போராட்டத்தால் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் சிறிது நேரம் பழைய பேருந்து நிலையம் நுழைவு வாயில் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.